நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர உள்ள தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் நம்பி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு தற்போது பெய்த மழையால் நிறைந்து உபரிநீர் சுமார் 4700 அடி வரை வெளியேறி வருகிறது. இதனால் ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து திசையன்விளை செல்லும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. […]
