இஸ்லாமிய மதத்தலைவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும், கொரோனா தாக்கத்தின் பாதிப்பை புரிந்துகொண்டும் வீடுகளிலேயே இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் தொழுகையை நடத்தி வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது […]
