Categories
தேசிய செய்திகள்

கை நிறைய பென்சன் வேணுமா…? உடனே இந்தத் திட்டத்தில் சேருங்க… முதுமையில் கஷ்டமில்லாமல் வாழலாம்…!!!

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் பயன் பெறுவது எப்படி என்பதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இளம் வயதிலேயே நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கிறீர்கள். ஆனால் முதுமை காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட கட்டாயம் பணம் அவசியம். உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. எனவே உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனில் வயதான காலத்தில் பென்ஷன் பணம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து

காமாட்சி விளக்கை தினமும் ஏற்றுங்கள்… என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…? படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

காமாட்சி விளக்கு என்பது வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம். விளக்குகளில் வட்டமுகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பலவிதங்களில் உள்ளது. காமாட்சி விளக்கு ஏன் ஏற்றுகிறோம் என்று தெரியுமா? அதனால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலக மக்களின் தவமிருந்த கடவுள் காமாட்சி அம்மன். அவர் தவமிருந்த போது அனைத்து கடவுளும் காமாட்சி அம்மனுக்குள்  அடங்கியதாக கூறப்படுகிறது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டில துளசி செடி வைத்து… இப்படி வழிபாடு செய்யுங்கள்… மகாலட்சுமி மட்டுமல்ல கிருஷ்ணரும் கூடவே இருப்பார்…!!!

ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன […]

Categories
ஆன்மிகம் இந்து

ராகு காலத்தில் இதில் விளக்கேற்றி பூஜை பண்ணுங்க… தடைகள் நீங்கும்… செல்வம் வளம் பெருகும்..!!

ராகுகாலத்தில் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீராத சங்கடங்கள் பல தீரும் என்பது ஐதீகம். அதைப்பற்றி இதில் பார்ப்போம். எலுமிச்சை தீய ஆவிகளை விரட்டுவதற்கு பயன்படுகின்றது. இதன் காரணமாகத்தான் திரிசூலம், மூர்த்திகள் ,யாககுண்டம் மற்றும் கதவின் இருபுறங்களிலும் இதை நாம் வைக்கின்றோம். கண்திருஷ்டி நீங்கி பாதுகாப்பு அளிக்க மிளகாயுடன் சேர்த்து கட்டி நம் வீட்டு முன் தொங்க விட்டிருப்போம். ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பல நன்மைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து

மொத்தம் 27 நட்சத்திரங்கள்… “இதுல எந்த நட்சத்திரக்காரங்க, எந்த ருத்ராட்சம் அணியனும்”… இதோ முழுவிபரம்…!!!

ருத்ராக்ஷம் எந்தெந்த நட்சத்திரம் உள்ள நபர்கள் எதை அணிய வேண்டும் என்று பார்ப்போம். ருத்ராட்சம் பல ஆன்மிக மற்றும் தெய்வ சக்திகள், மருத்துவ குணங்கள் நிறைந்த பார்க்கப்படுகின்றது. ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து தோன்றியது என்று கூறப்படுகின்றது. இதில் பல வகைகள் உண்டு. மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் மூலம் பல நன்மைகளை பெறுகின்றனர். மாணவர்கள் மட்டும் தான் ருத்ராட்சம் அணிய வேண்டியது இல்லை. அனைவருமே ருத்ராட்சத்தை அணிய முடியும். ருத்ராட்சத்தில் பல முகங்கள் உண்டு. அந்தவகையில் 27 […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் எளிமையாய்… “விநாயகர் பூஜை எப்படி நடத்துவது”…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வீட்டில் எவ்வாறு எளிமையான முறையில் விநாயகர் பூஜை நடத்தலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். விநாயகர், கணபதி, ஆனைமுகன், ஈசன் மைந்தன், தொந்தி கணபதி என இடத்திற்கு ஏற்றார் போல் பல பெயர்களில் அழைக்கப்படுபவர் பிள்ளையார். பிள்ளையாரை பிடிக்காதவர் எவரும் இருக்க மாட்டார் என்பதற்கு இணங்க, கோயில், வழிபாடு என்றாலே முதலில் அங்கு நிலைகொண்டிருப்பவர் ஆனைமுகனே. விநாயகர் மிகவும் எளிமையை விரும்பக்கூடியவர். அதனால்தான் என்னவோ, பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதன்படியே, கூப்பிட்டவர் […]

Categories
தேசிய செய்திகள்

முதலீட்டை பெருக்க…. “தபால் நிலையத்தின் எளிமையான 5 சேமிப்பு திட்டங்கள்”… ஜாயின் பண்ணி பாருங்க…!!!

முதலீட்டை இரட்டிப்பாக்கும் 5 சேமிப்பு திட்டங்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபம் தருகிறது. ஐந்தே ஆண்டுகளில் இதில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அந்த முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு உங்களுக்கு சிறந்த தேர்வாக […]

Categories
ஆன்மிகம் இந்து

குல தெய்வம் எது என்று தெரியவில்லையா…? கவலை வேண்டாம்… இந்தக் கோயிலில் வழிபாடு செய்யுங்க…!!!

குடும்பம் செழிப்பு, விருத்தி, பாக்கியம் முதலானவை தலைமுறை தலைமுறையாய் தழைத்தோங்க குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியம். குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற்றாலும், முதலில் குலதெய்வ வழிபாடு செய்த பிறகுதான், நிகழ்ச்சி தொடங்கும். குலதெய்வம் என்பது தாய் தந்தைக்கு அடுத்தபடியாக நம்மை வழிநடத்தும் ஒரு அற்புத சக்தியாக பார்க்கப்படுகின்றது. சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள். ஆனால் மற்ற சிலரோ குலதெய்வத்தை முன்னிறுத்தி அனைத்தையும் செய்வார்கள். அதேபோல் சிலருக்கு குலதெய்வம் எது என்பதே தெரியாமல் […]

Categories
ஆன்மிகம் இந்து

கெட்டது மட்டுமல்ல… நல்லதையும் செய்யும் ஏழரை சனி… சாஸ்திரம் கூறும் உண்மை…!!!

நாம் ஜோதிடம் பார்க்கும்போது மிக முக்கியமாக பார்ப்பது அந்த ஜாதகருக்கு சனி நடக்கிறதா என்பதா தான் இருக்கும். அதுவும் ஏழரை சனியாக இருந்தால், அவ்வளவு தான் அடுத்து என்ன நடக்குமோ, என்ன நடக்குமோ என்று எண்ணி பயந்தே ஒரு நோயை தேடி கொண்டு வந்திடுவோம். ஏழரை சனி என்று ஏன் கூறுகிறோம் என்றால் சந்திரன் உள்ள ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளும், சந்திரன் குடியிருக்கும் ராசியில் சனிபகவான் இருக்கும் காலங்களைத் தான் நாம் ஏழரை சனி […]

Categories
ஆன்மிகம் இந்து

ஜாதகத்தில் குரு பலன் இருந்தால் என்ன நடக்கும்…? ஆன்மீகம் தரும் தகவல்…!!!

ஜாதகத்தில் நவ கிரகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் நவக்கிரகங்களின் பெயர்ச்சியே ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமை ஏற்படுவதற்கு முழு காரணம். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் தான் ஒருவருக்கு ராகு, கேது, சனி மற்றும் குரு பெயர்ச்சி போன்றவற்றை ஜோதிடத்தில் தீர்மானிக்கிறார்கள். அவற்றில் குரு பலன் என்ன என்பது பற்றி பார்ப்போம். ஒருவருடைய வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய ஜாதகத்தில் உள்ள குரு பலனால் தான். குருபகவான் என்பது நவக்கிரகங்களில் முதன்மையான […]

Categories
ஆன்மிகம் இந்து

அம்மன் சன்னதியில் மாவிளக்கு தீபம்… ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்… ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

கடவுள் சன்னதியில் ஏற்றப்படும் தீபம்களில் மாவிளக்கு தீபம் ஒன்று. இதை பிரார்த்தனையாக செய்வது வழக்கத்தில் உள்ளது. அதுவும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. இது பல காலமாக முன்னோர்களால் செய்யப்பட்டு வரும் ஒரு பிரார்த்தனை. பச்சரிசி மாவையும், வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் சேர்த்து சிறிது நெய் விட்டு மாவாக பிசைந்து அதை வாழை இலையின் நடுவே விளக்கு போல் அமைத்து, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி […]

Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணி பெண்களே… உடனடியா தடுப்பூசி போட்டுக்கோங்க… கொரோனா தொற்று கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்…!!!

கர்ப்பிணி பெண்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தொற்று கருவில் உள்ள குழந்தையை பாதிக்க வல்லது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தீவிர கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக மக்கள் அனைவருக்கும் முழுவேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா […]

Categories
ஆன்மிகம் இந்து

பல்லிகளை ஏன் கொல்லக்கூடாது என்று கூறுகிறார்கள் தெரியுமா…? சாஸ்திரம் கூறும் தகவல்…!!!

கடவுள் மனிதர்களுடன் உரையாட வேண்டும் என்பதற்காக சில வழிகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பல்லி. நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தில் பல்லியின் உருவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். முன்னொரு காலத்தில் நமது வீட்டில் ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பொழுது நல்லது, கெட்டது என்று பல்லி எச்சரிக்கும். நமது சாஸ்திரங்களை ஒன்றாக கூறப்படுவது பல்லி அல்லது கௌரி சாஸ்திரம். நம் உடலில் எந்த பாகங்களில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதை […]

Categories
ஆன்மிகம் இந்து

சுப நாளில் நம் வீட்டு வாசலில்… எதற்காக மாவிலை தோரணம் கட்டுகிறோம் தெரியுமா…? ஆன்மீகம் கூறும் தகவல்…!!!

நமது முன்னோர்கள் நமது வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சில பழக்கவழக்கங்களை நடைமுறைப் படுத்தி உள்ளனர். அதில் முக்கியமானது வீட்டில் மாவிலையை கட்டுவது. வீட்டில் நுழையும்போது துர்தேவதைகளை வீட்டில் வருவதை தடுப்பதற்காக நூலில் மஞ்சளை தேய்த்து அதில் மாவிலையை கோர்த்து, அதில் மஞ்சள் குங்குமம் வைத்து சிறிது வேப்பிலையுடன் சேர்த்து வீட்டின் வாசலில் கட்டுகின்றனர். மாவிலைத் தோரணம் நாம் பொதுவாக பண்டிகை நாட்களிலும், வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது, சில […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டில் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கணுமா…? பச்சைக் கற்பூரத்தை இப்படி செஞ்சு வையுங்க… ரொம்ப நல்லது..!!!

நம் வீட்டு பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் முக்கிய பொருள்களில் ஒன்று பச்சைகற்பூரம். இது செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள். இதனை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து பூஜை செய்தால் வீட்டில் பணம் எப்போதும் தங்கும். பச்சைக்கற்பூரம் இயற்கையாகவே வாசனையை தரும் தன்மை உடையது. இதற்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. இதை வீட்டில் எங்கு வைத்தாலும் நிம்மதி கிடைக்கும். இந்த வாசனை வீட்டிலுள்ள துஷ்ட சக்திகளை வீட்டை விட்டு […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு முன்னாடி…. கட்டாயம் மருதாணி செடியை வையுங்க… துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது…!!!

நம் வீட்டிற்கு முன்பாக மருதாணி செடியை வைத்தால் அது வாஸ்து தோஷத்தை போக்கிடும் என சாஸ்திரம் கூறுகிறது. அது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம்முடைய வீட்டில் மருதாணி செடி வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும். முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும் அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. அதுமட்டுமல்ல பூச்சிகள் நெருங்காது. இதற்கு காரணம் மருதாணி செடியில் இருந்து வரும் வாசம் தான். உங்கள் வீட்டில் எந்த ஒரு […]

Categories
ஆன்மிகம் இந்து

எல்லார் வீட்டிலும் எதற்காக “காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுகிறார்கள்” என்று தெரியுமா…? இதுதான் காரணம்… படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

காமாட்சி விளக்கு என்பது வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம். விளக்குகளில் வட்டமுகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பலவிதங்களில் உள்ளது. காமாட்சி விளக்கு ஏன் ஏற்றுகிறோம் என்று தெரியுமா? அதனால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம். உலக மக்களின் தவமிருந்த கடவுள் காமாட்சி அம்மன். அவர் தவமிருந்த போது அனைத்து கடவுளும் காமாட்சி அம்மனுக்குள்  அடங்கியதாக கூறப்படுகிறது .அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். […]

Categories
பல்சுவை

உலக யோகா தினத்தை முன்னிட்டு… யோகாசனமும் அதன் வகைகளையும் பற்றி பார்ப்போம்… கட்டாய தெரிஞ்சுக்கோங்க..!!!

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமன்பாட்டில் இருக்க உதவுகிறது. இந்தியாவில் பதஞ்சலி முனிவர் மூலமாக […]

Categories
பல்சுவை

“உலக யோகா தினம்”… யோகாவால் விளையும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோமா….!!!

யோகாசனம் குறித்து இந்த குறிப்பில் நாம் தெரிந்து கொள்வோம். 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் […]

Categories
ஆன்மிகம் இந்து

பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால்… என்ன பலன் என்று தெரியுமா..? கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம். நம் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். தலையில் பல்வி வழுந்தால்:  தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். மேலும்  அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.12 போதும்…. ரூ.2 லட்சம் அரசின் பிரதான் மந்திரி காப்பீடு பெறலாம்… அசத்தலான திட்டம்… எப்படி இணைவது…!!!

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது. ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு. இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய். ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி […]

Categories
ஆன்மிகம் இந்து

வீட்டின் திருஷ்டி கழியும்… தடைகள் உடையும்… விஷ ஜந்துக்கள் அலறி ஓடும்… இத உங்க வீட்டு முன்னாடி கட்டாயம் கட்டுங்க…!!

ஜோதிட ரீதியாக எண்ணற்ற பலன்களை  கொண்ட ஆகாச கருடன் கிழங்கு பற்றி இதில் பார்ப்போம். இந்த கிழங்கு 16 வகைப்படும். இதன் இலையும், நமக்கு பலன் தரக்கூடியது என்று கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால், அது காற்றையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் எதுவுமில்லாமல் கொடியாக இலையுடன் சேர்ந்து வளரக்கூடியது. இது காடு மலைகளில் அதிகமாக காணப்படும். இதன் இலை […]

Categories
ஆன்மிகம் இந்து

லட்சுமி கடாட்சம் துளசி மாடம்… உங்க வீட்டில கட்டாயம் வையுங்க…. ரொம்ப நல்லது…!!!

ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன […]

Categories
டெக்னாலஜி

5ஜி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை… என்னென்ன…? நீங்களே பாருங்க…!!!

நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருப்பது 5ஜி தொழில்நுட்ப சேவை. அலைபேசியை அடிப்படையாகக்கொண்ட இணையதளம் சேவையே 5ஜி தொழில்நுட்பம். 5ஜி சேவையானது 4ஜியை விட 100 மடங்கு வேகம் உடையது என்று கூறப்படுகின்றது. அதாவது, ஒரு திரைப்படத்தை சில வினாடிகளில் நம்மால் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதால் ஒரு குறிப்பிட்ட சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று தகவலை பரிமாற்றிக் கொண்டு விபத்து ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும் […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு அரிசி பானையில் இத எப்பவுமே வச்சிருங்க… பஞ்சம் வராது…. ஐஸ்வர்யமும் பெருகும்…!!

நமது வீட்டு அரிசி பானையில் நாம் இப்படி செய்து வந்தால் எப்பொழுதும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது மற்றும் ஐஸ்வர்யம் பெருகும். அதைப்பற்றி நாம் இது தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். எதற்காக சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக தான். அதேசமயம்  வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்க வீட்டு பூஜை அறையில்… “இந்தப் பொருள்களை வச்சு பூஜை பண்ணாதீங்க”… நல்லது இல்லை…!!

பூஜை அறையில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்ய கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வெற்றிலை பாக்குடன்  சுண்ணாம்பு வைத்து பூஜை செய்யக்கூடாது . அவியல், பொரியல், கடலை மற்றும் கல்கண்டு நிவேதனம் செய்யலாம். பச்சரிசி சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும். நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம், ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல. தேங்காயை உடைத்து பிறகு முடியை […]

Categories
ஆன்மிகம் இந்து

ராகு காலத்தில் எலுமிச்சையில் விளக்கேற்றி பூஜை பண்ணுங்க… தடைகள் நீங்கும் செல்வம் பெருகும்..!!

ராகுகாலத்தில் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீராத சங்கடங்கள் பல தீரும் என்பது ஐதீகம். அதைப்பற்றி இதில் பார்ப்போம். எலுமிச்சை தீய ஆவிகளை விரட்டுவதற்கு பயன்படுகின்றது. இதன் காரணமாகத்தான் திரிசூலம், மூர்த்திகள் ,யாககுண்டம் மற்றும் கதவின் இருபுறங்களிலும் இதை நாம் வைக்கின்றோம். கண்திருஷ்டி நீங்கி பாதுகாப்பு அளிக்க மிளகாயுடன் சேர்த்து கட்டி நம் வீட்டு முன் தொங்க விட்டிருப்போம். ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பல நன்மைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையாக ஆக்ஸிஜன் பெற… இந்த செடியை மட்டும் உங்க வீட்டு முன்னாடி வையுங்க… பல நோய்களுக்கு தீர்வு..!!

உடலில் பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக பயன்படும் ஆடாதொடையின் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் தலைவலி, காய்ச்சல் என்றால் அனைவரும் மருந்து மாத்திரைகளை தேடி ஓடுகின்றன. ஆனால் முன்னொரு காலத்தில் இயற்கை மருந்து அதிக அளவில் காணப்பட்டது. அதை அனைவரும் தற்போது மறந்து விடுகிறோம். உடலில் பல பிரச்சினைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதுபோல நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஆடாதொடை மூலிகையை பற்றி நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்குவதற்கு முன்பாக வெதுவெதுப்பான நீரில்… 2 கிராம்பு போட்டு சாப்பிடுங்க… அதிசய பலன்கள் கிடைக்கும்…!!

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் கிராம்பு பல நன்மைகளை நமக்கு தருகின்றது. சளி, இருமலுக்கு உகந்த மருந்தாகவும் பயன்படுகின்றது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால்  உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டு சமையல்ல எந்த உப்பு யூஸ் பண்றீங்க… இந்த உப்பு… அதாவது இந்துப்ப சேத்துக்கோங்க… ரொம்ப நல்லதாம்..!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி…. ஆய்வுகள் கூறும் வியக்கவைக்கும் நன்மைகள்….!!!

தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வதனால் உங்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தினமும் நடைப்பயிற்சி செய்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தினமும் நடைப்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும். கலோரிகள் எரிக்க உதவுகிறது. நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது. எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது. உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு சத்தின் அளவை குறைக்கிறது. கண் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சன் பாத்: தினமும்15 நிமிடம் சூரிய ஒளியில் நில்லுங்கள்… உங்க உடம்பில் இந்த மாற்றமெல்லாம் நடக்கும்..!!

தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க அனைவரையும் இயற்கையை ரசிக்க எடுத்தரைக்கிறது. நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தனது புதிய ஆய்வின் மூலம் சூரிய ஒளி உடலில் படும் பொது மன ரம்மியம் அடைவதாக தெரிவித்துள்ளது. சூரிய ஒளியினால் கிடைக்கும் 15 நன்மைகள்: 1. […]

Categories
லைப் ஸ்டைல்

மக்காச்சோளத்தின் அற்புத நன்மைகள்… எந்த நோயுமே வராது… உடலுக்கு அவ்வளவு நல்லது…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன்படி மக்காச்சோளம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மக்காச்சோளத்தில் இரும்பு சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம் மற்றும் செம்பு சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுப்புண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய… இந்த கீரையை மட்டும் சாப்பிடுங்க…!!

சைனஸ்க்கு விடைக் கொடுக்கும் அகத்திக் கீரை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக […]

Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலை காக்கும் பூண்டு பால்…. இனிமே தினமும் இத குடிங்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி பூண்டில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களையும் விரட்டி […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதால் இத்தனை நன்மைகளா?…. இது தெரியாம போச்சே….!!!!

இப்போது உள்ள ஆண்கள் தாடி வளர்ப்பது பேஷனாக மாறிவிட்டது. பொதுவாக தாடி வளர்த்தார் காதலில் தோல்வியா என்றே கேலி செய்வார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் இவ்வளவு நல்லது இருந்தால் ஏன் வைக்க தயங்க வேண்டும். தாராளமாக வைக்கலாம். தாடி வளர்ப்பதால் உடல் நலத்திற்கு நல்லது. சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், சூரியனிலிருந்து வரும் 75% புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காமல் நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சுக்குக்கு மிஞ்சிய மருந்து எதுவும் இல்லை”… சளி, இருமல், காய்ச்சலுக்கு உகந்த மருந்து… கட்டாயம் யூஸ் பண்ணுங்க…!!

நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை  போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும்.  பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்துக்கு இரண்டு நாள் இத மட்டும் பாலோ பண்ணுங்க… வயிற்றிலுள்ள புழு, பூச்சி எல்லாம் ஓடிப் போயிடும்…!!!

வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே இத ஒதுக்காதீங்க… பழைய சாதம் சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்…!!!

நம் முன்னோர்களின் காலத்தில் பல்வேறு உணவு வகைகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சோளம் மற்றும் கம்பு போன்ற உணவுகள் உடலுக்கு நலம் தருபவை. அப்போது வாழ்ந்த முன்னோர்களுக்கு எவ்வித நோயும் வருவதில்லை. அப்போது பழைய சோறு என்பது ஒரு அமிர்தமாக இருந்தது. தற்போது அதனை மக்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பழைய சோறு சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதன்படி பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம் என்று சுகாதாரத் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கற்பூரத்தை பூஜைக்கு மட்டுமில்ல… இப்படிக்கூட யூஸ் பண்ணலாம்… இதுவரை யாரும் அறிந்திராத நன்மைகள்…!!

கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது,  நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது  குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…”கோடை வெயிலுக்கு இதமான இந்த ஜூஸ குடிங்க”… ரொம்ப நல்லது…!!

அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக, உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய இயற்கை உணவாக கருதப்படும் எலுமிச்சை பழம், புதினா, இஞ்சியை வைத்து அருமையான ருசியில் இந்த ஜூஸ்ஸ செய்து குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும், உடம்பிலுள்ள வெப்பத்தை தணிக்கவும், எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ஜூஸ் பெரிதும்உதவுகிறது. லெமன் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: எலுமிச்சை– 1. நாட்டுச் சர்க்கரை – ருசிக்கேற்ப. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…”இதை கட்டாயம் நீங்க சாப்பிடுங்க”… சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டலாம்…!!

வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்குகிறது. இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மரணத்தை தரக்கூடிய கொடூர நோயையும்… ஓட ஓட விரட்டும் தேங்காய்ப்பூ… கிடச்சா கண்டிப்பா சாப்பிடுங்க…!!

பூ விழுந்த தேங்காயை நாம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின்  கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செம்பு காப்பு அணிவதால்… உங்கள் உடம்பில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கையில் காப்பு அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நம் முன்னோர்கள் கூறிய தகவல் என்ன என்பதை இதில் பார்ப்போம். புதிய புதிய பொருட்களின் உற்பத்தி காரணமாக முன்பிருந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் சிலர் சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அதில் கையில் செம்பு காப்பு அணிவது. அது ஸ்டைல் என நினைத்து சிலர் அணிந்து வருகின்றனர். செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புத பலன்களை அளிக்கும். உடல் வெப்பத்தை குறைக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு சி.டி.ஸ்கேன் 400 எக்ஸ்ரேக்கு சமம்… வெளியான அதிர்ச்சி செய்தி…!!

கோவிட் 19 தொற்றுக்கான லேசான அறிகுறி உள்ளவர்கள் சி.டி. ஸ்கேன் எடுப்பதால் எந்த பயனுமில்லை என்றும் அடிக்கடி சி.டி.ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் லேசான அறிகுறி இருந்தாலும் உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. பலர் லேசான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

14 நாட்கள்… தினமும் 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வாங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த தோலை தூக்கி போடாதீங்க… இத வச்சி என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா…? கேட்டா அசந்துடுவிங்க..!!

எலுமிச்சை தோலில் எவ்வளவு நன்மை இருக்கு என்கின்றது பற்றி தெரியுமா? அதை நீங்கள் தெரிந்து கொண்டால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டீர்கள். எலுமிச்சை ஊறுகாயை தவிர வேறு எந்த ஒரு பொருளுக்கும் எலுமிச்சை தோலை நாம் பயன்படுத்த மாட்டோம் . எலுமிச்சை சாற்றை காட்டிலும் தோலில் அதிக அளவு நன்மை உள்ளது. எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்த பழம். இதன் சாறை இணை பொருளாக பயன்படுத்துவோம். ஊறுகாயில் மட்டும் எலுமிச்சை தோளோடு பயன்படுத்துவோம். ஆய்வுகள் எலுமிச்சை தோல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த…”தினமும் ஒரு டம்ளர் பாதாம் பால் குடுங்க”… ரொம்ப நல்லது…!!

பாதாம் பால் தரும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும், தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரே இரவில் மூட்டு வலியை சரி செய்ய….”இதை மட்டும் பண்ணுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

தீராத மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

2 கப் தண்ணீரில்…. 6 துண்டு இஞ்சி… கொரோனாவை கூட ஓட ஓட விரட்டலாம்… கட்டாயம் ட்ரை பண்ணுங்க…!!!

சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]

Categories

Tech |