Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யார் இப்படி செய்தது…? ரத்தமாதிரிகளுடன் வீசப்பட்ட ஊசிகள்…. அதிகாரியின் நடவடிக்கை….!!

ரத்த மாதிரிகளுடன் ஊசிகளை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகில் திருக்கண்டீஸ்வரம்-சோத்தக்குடி இணைப்புசாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் ரத்தமாதிரிகளுடன் 200-க்கும் மேற்பட்ட ஊசிகள் குவிந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சுகாதாரதுறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி நன்னிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குவிந்து கிடந்த ஊசிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியபோது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளத்தில் இருந்து பிடித்தோம்…. சில மணி நேரத்தில் விற்பனை…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…..!!

நன்னிலம் அருகில் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இறைச்சி பொருட்களான மீன், ஆடு, கோழி போன்றவை விற்பனை செய்ய முடியாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனையடுத்து கிராமத்தில் இருப்பவர்களுக்கு கடல்மீன் கிடைக்காததால் குளத்தில் பிடிக்கப்படும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளி இல்லாமல்…. ரேஷன் கடையில் குவிந்த கூட்டம்…. ஒழுங்குபடுத்திய காவல்துறையினர்….!!

ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்குவதற்கு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு […]

Categories

Tech |