இளம்பெண்ணை காதலிப்பது தொடர்பாக நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பள்ளியாடி கிராமத்தில் ஷைஜூ(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சதீஷ்குமார்(21) என்பவருடன் தினமும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஷைஜூ இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு காதலை வளர்த்தனர். இதுகுறித்து ஷைஜூ சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது ஷைஜூ காதலித்த அதே இளம்பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் […]
