சிவகாசியில் விற்பனைக்கு கொண்டு வந்த நட்சத்திர ஆமையைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா கோவில் தெருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவண்ணாமலையில் பணி புரிந்த போது அங்கு ஒரு ஆமை கிடைத்ததாக கூறப்படுகின்றது. அதை ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டிற்கு கொண்டுவந்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆமையை விற்பனை செய்வதற்காக யூடியூப்பில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக், நிதின் போன்றோர் ஆமையை வாங்க தயாராக இருப்பதாக […]
