அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை நாட்கள் வர உள்ளதால் மும்பை,புது டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயனியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கும் நோக்கத்திலும் நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. […]
