உபகார மாதா ஆலயத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த உபகார மாதா ஆலயத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு தேர் பவனி வருதல் ஆகும். இந்த தேர் பவனியில் வண்ண விளக்குகளால் மாதா அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் தேரை இழுத்து வீதி உலா வந்துள்ளனர். இந்த தேர் பவனி வருதல் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். […]
