ஆவணி மாத சனி மகா பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெயகொண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத சனி மகா பிரதோஷ பூஜை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஜெய்கொண்டேஸ்வரர் மற்றும் நந்திபெருமான் போன்ற தெய்வங்களுக்கு இளநீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்து […]
