தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி இருந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பு […]
