சாலையோர கடைகளை அப்புறப்படுத்த முயன்றதால் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டி அமைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை போடக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தனர். இதனால் சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]
