நடைபாதை பூங்கா ஏற்படுத்துவதற்கு பூர்வாங்கப் பணிகளை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏமப்பேர் குளபகுதியில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தில் அமைந்துள்ள செடிகளை அகற்றி குளத்திற்கு நீர் வரத்து மற்றும் வெளியேற்று வாய்க்கால்களை விரைவாக தூர்வாரவும், குளத்தின் கரை பகுதியில் நடைபாதையுடன் சேர்த்து பூங்கா அமைப்பதற்கு முதற்கட்ட பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்கு தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை விரைவாக […]
