தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உடல் நலத்திற்காக காலைவேளையில் சென்னை அடையார் தியாசபிகல் பூங்காவில் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் நேரடியாக முதல்வர் ஸ்டாலினுடன் தினமும் பேசி தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே நேற்று மு.க.ஸ்டாலின் நடைப் பயிற்சி செய்யும்போது போது ஒருவர் முதல்வர் ஸ்டாலின் உடல் நலத்தை விசாரித்தார். அதன் பின்னர் நீங்கள் 5 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தன்னம்பிக்கையாக வெளியே நடமாட முடிகிறது. […]
