காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய மந்திரியான ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பதாவது “நமது நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ராகுலுக்கு ஒரு போதும் கிடைக்காது. வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றியடைந்தால், ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்..? ஆகவே 2024-ல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 40 இடங்களுக்கு மேல் பெறாது. ராகுல்காந்தியின் நடைப்பயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் எதற்காக பயப்படவேண்டும்?. […]
