அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கநகைகளை வாங்கலாம் என முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் அட்சயதிருதியை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விலை அதிகரித்தாலும் இந்த அட்சயதிருதியை அன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதும். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் […]
