இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்ற இஸ்லாமிய பெண்ணின் புர்காவை கழட்ட சொல்லி சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது பெண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கும்பல் அந்த வாகனத்தை மறித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் பின்சீட்டில் அமர்ந்திருந்த இஸ்லாம் பெண்ணின் புர்காவை கழட்டுமாறு வற்புறுத்தி சோதனை செய்தனர். […]
