நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைபட்டி பகுதியில் நிக்கோலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் உள்ளிட்ட 8 பேர் மொட்டைக்கோபுரம் கடற்கரையிலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கடற்கரையில் இருந்து 10 மைல்கள் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த மற்ற […]
