வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்குவதில் வல்லவர் பார்த்திபன். அப்படி அவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே சாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான் லீனியர் முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பு. […]
