பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அதில் திருநங்கையான நமிதா மாரிமுத்துவை போட்டியாளராக அறிவித்த விஜய் டிவிக்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து நமீதா திருநங்கையாக தன்னுடைய துன்பங்களை தெரிவித்தபோது போட்டியாளர்கள் அனைவரும் […]
