நடிகை ஷகிலா தனது மறைவு பற்றிய பொய்யான செய்திகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து பிரபலம் அடைந்தார். தமிழில் ‘தூள்’, ‘வாத்தியார்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் என்று தீவிரமாகக் களமிறங்கியுள்ளார் ஷகிலா. இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாகச் சிலர் இணையத்தில் செய்திகள் […]
