பிரபல நடிகை பாலத்திற்கு அடியில் சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு என்ற பிரபல நடிகை, சில தினங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போனார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தலைநகர் டாக்காவில் இருக்கும் ஹஸ்ரத்பூர் பாலத்திற்கு அருகில், கிடந்த இப்படி சாக்குமூட்டையில் ரைமாவின் சடலம் கண்டறியப்பட்டது. அவரின் உடலில் பல காயங்கள் இருந்தது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி […]
