பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான மிமி சக்ரவர்த்தி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நிலையில், கடும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பங்கேற்ற கொரோனா தடுப்பூசி முகாம் போலியானது என்றும் , அந்த மருந்து போலியானது என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி முகாம் நடத்திய தேபஞ்சன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
