தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்த, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு பார்வதி மற்றும் பசுபதி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ போன்றவைகள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
