தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடிகை சாயிஷாவை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் குழந்தையின் புகைப்படம் இதுவரை ஒன்று கூட வெளியானது கிடையாது. இந்நிலையில் நடிகை சாயிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சாயிஷா தன்னுடைய தாயாருடன் நடந்து செல்கிறார். […]
