சஞ்சனா கல்ராணியை கார் டிரைவர் கடத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சஞ்சனா கல்ராணி கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருந்தார். தடய அறிவியல் ஆய்வில் சஞ்சனா போதைப்பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. தற்போது ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள பெங்களூர் இந்திராநகரில் இருந்து வாடகை காரில் சென்றுள்ளார். அப்போது டிரைவர் சூசை மணிக்கும், சஞ்சனாவுக்கும் […]
