பிரபல சின்னத்திரை நடிகை கௌசல்யா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை நடிகை கௌசல்யா தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல தொடர்களில் பாட்டியாக வரும் இவரது கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இவர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
