மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், […]
