பிரபல கன்னட நடிகைக்கு சொந்தமான கார் மற்றொரு காருடன் மோதி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகியுள்ளனர். பல திரைப்படங்களில் நடித்த பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ கர்நாடக மாநிலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கர்நாடக மாநிலம் உள்ள உப்பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் இந்த காரில் நடிகை உமாஸ்ரீ […]
