நடிகை ஆண்ட்ரியா பிசாசு-2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அத்துடன் அவருக்கு 5 படங்கள் கைவசம் இருக்கிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா பேட்டியில் அளித்ததாவது, ”கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்கள் தற்போது அதிகம் வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒன்று. இந்நிலைமை தொடர வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசனுடன் நான் நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படத்திலும் எனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்தது. […]
