பிரபல மலையாள நடிகர் வினித் தட்டில் ஐயப்பனும் கோஷியும், அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இன்று கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் வினித்திடம் ஆலப்புழையைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் கடன் கொடுத்துள்ளார். இதில் குறிப்பிட்ட தொகையை திருப்பித் தந்துள்ள நிலையில் மீதமுள்ள தொகை திருப்பிக் கொடுக்குமாறு அலெக்ஸ் நடிகர் வினித் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே இதுகுறித்து வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பணத்தை அவர் […]
