நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற இளைஞரின் செயலை சமூக வலைதளத்தில் பார்த்து ஒரு லட்சம் நிதியுதவி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மதுரையில் பிச்சை எடுத்து, தினமும் கிடைக்கும் 100 ரூபாயில் சாப்பிட்டது போக மீதி இருக்கும் பணத்தை சேர்த்து ஊரடங்கு சமயத்தில் நடமாடும் டீக்கடையை ஆரம்பித்துள்ளார். அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னைப்போல் ஆதரவற்ற ஏழைகளுக்கு தினமும் காலை, மாலை, இரவு என 30 உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் கொடுத்து வருகிறார். […]
