கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் மாபியா படம் வெளியாகியிருந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]
