பொன்னியின் செல்வனில் நடித்துள்ள பிரபு அப்படத்தின் வெற்றியால் குஷியில் உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் திரையுலகிற்கு நல்ல காலம் பிறந்துள்ளது. ஏனெனில் அனைத்து படங்களும் வரிசையாக வெற்றி பெறுகிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர். மற்றும் கமல்ஹாசன் எடுக்க முயன்றார்கள். பொன்னியின் செல்வன் கதையை என் தந்தை சிவாஜி கணேசன் 5 முறை படித்ததாக கூறுவார். […]
