நடிகர் நட்டி புதிதாக நடிக்கும் படத்தில் ஷில்பா மஞ்சுநாத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் நட்டி கடைசியாக தனுஷின் கர்ணன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நந்தினி, ப்ரீத்தி, பாரதா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேலன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். […]
