புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசியை நடிகர் ரோபோ ஷங்கர் நேரில் சந்தித்து பண உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முறுக்கு மீசையோடு அவருக்கு அப்பாவாக வலம் வந்தவர் தவசி. இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே உடல் மெலிந்து போய் மிகவும் எலும்பும் தோலுமாக இருக்கும் தவசி தனது புற்றுநோய் சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டதையடுத்து நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, […]
