மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையினை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி காலமானார்.இவருடைய மறைவு மொத்த திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அவருடைய தந்தை ராஜ்குமார் நினைவிடத்தின் அருகில் இவருடைய உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இவருடைய நினைவிடத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் […]
