தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார். […]
