ஆர்.கே.சுரேஷின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. பல விமர்சகர்களும் விமர்சித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை, அவரின் எல்லையை மீறி உருவத்தை கேலி செய்து விமர்சித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இவரின் மேல் கோபம் எழுந்துள்ளது. […]
