பிரபல நடிகர் ஆனந்தராஜ்யின் தம்பி கனகசபை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை(50) இவருக்கு திருமணம் ஆகவில்லை. நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் தம்பி கனகசபை ஆவார். தொழிலதிபரான இவர் ஏல சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த கனகசபை கடந்த 5- தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் […]
