பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]
