குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் […]
