கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றன. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், மதுரை மாவட்ட உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு […]
