மாணவிகளின் விடுதி சுவற்றில் ஒரு சிறுத்தை படுத்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக கல்லூரியின் அருகிலேயே ஒரு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால் விடுதி வளாகத்தில் ஏராளமான புதர் மண்டி காணப்படுகின்றது. […]
