தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தினசரி பாதிப்புக்குள்ளாகும் கொரோனா நோயாளிகளை இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி போதிய […]
