நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னையில் அதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பட்சத்திலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்து கண்டறிய பட்டவர்கள்தான். இந்நிலையில் கொரோனா நோயை விரைவில் கட்டுப்படுத்தி கொரோனா இல்லாத மாநிலமாக […]
