நடப்பு நிதியாண்டில் 100 லட்சம் டன் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா – உக்ரைன் போர், கொரோனா போன்ற சூழ்நிலைகள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். இந்நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி […]
