தற்போது இந்தியா கோதுமையை 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த வருடம் கோதுமையை 1.5 கோடி டன் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 11.10 கோடி டன் அளவுக்கு இந்த வருடம் உற்பத்தி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் தானிய உற்பத்தி நடப்பாண்டில் உபரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடக்கும் போர் காரணமாக உணவு தானியங்களுக்கு பல நாடுகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தகைய நாடுகளுக்கு உணவு தானியங்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு […]
