பெண்ணிடம் நகை பறித்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருக்கின்றார். இவர் ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவிதா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மொடக்குறிச்சி மொட்ட பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியைப் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். […]
