ஆறு பேரை திருமணம் செய்து ஏழாவது திருமணத்திற்கு முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவருக்கும் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் சென்ற 7ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக மணமகளின் அக்கா- மாமா என இரண்டு பேர் மட்டுமே வந்ததாக சொல்லப்படுகின்றது. […]
