ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே இருக்கும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற 27ஆம் தேதி தங்களின் மகன் வீட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். […]
